இலவச காப்பீடு திட்டத்தில் கூடுதல் 52 மருத்துவமனைகள் சேர்ப்பு..! நிதித்துறை செயலாளர் உத்தரவு!!!

1

தமிழக அரசு ஊழியர்களுக்கான இலவச காப்பீடு திட்டத்தில் கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்க்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் நாட்டில், மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர். தற்போது அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு காப்பீட்டுத்தொகை ரூ.4 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தங்களது மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை பெற்று பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியம். தற்போது இந்த தமிழக அரசின் ஊழியர்களுக்கான இலவச காப்பிட்டு திட்டத்தில் கூடுதல் மருத்துவமனைகள் சேர்க்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தரவின் அடிப்படையில் 52 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here