தமிழகத்தில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் புத்தாடை, பட்டாசு என பொதுமக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரைக்கும், பின்னர் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதி என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பட்டாசு வெடிப்பதற்கான அறிவுரைகளை மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி,
- சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் ஆன பசுமை பட்டாசுக்களை மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும். சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.
- உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய படி 2 மணி நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
- பட்டாசுகளை வாகனங்கள் அருகிலோ, கால்நடைகள் அருகிலோ வெடிக்க கூடாது.
- பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிவது கூடாது. இதனால் தங்களை விட அருகாமையில் இருப்பவர்களுக்கே அபாயம் அதிகம்.
- மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
- வெடி மேல் தகர டப்பாக்களை மூடி வைப்பது கூடாது.
- குடிசை பகுதியிலோ, ஓலைக்கூரை அருகிலோ ராக்கெட் போன்ற வெடிகளை கொளுத்தக்கூடாது.
- பட்டாசுக்கள் அருகில் எரியும் விளக்கை வைக்கக்கூடாது.
- ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.
- குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது.
- பட்டாசு விற்பனை செய்யும் கடை அருகில் புகைபிடிப்பதோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது.
- பட்டாசு விற்பனையாளர்கள் மெழுகுவர்த்தியோ, பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடைகளில் உபயோகிக்கக் கூடாது.
- பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகிப்பது நல்லது.
- அப்படி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் பட்சத்தில், அவசர உதவி எண் 108 (ஆம்புலன்ஸ்), 101 (தீயணைப்பு), 112 (தேசிய உதவி), 100 (காவல்துறை) ஆகிய எண்களுக்கு விரைந்து தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.
வெளுத்து வாங்கும் கனமழை.., 68 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்.., 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!