தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கன்பார்ம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

0
தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கன்பார்ம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு முயற்சிகளால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான புதிய முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 33 மாத தி.மு.க. ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ,8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறத்தாழ 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் மாபெரும் தொழிற்புரட்சிக்கான அடித்தளத்தை இந்த ஆட்சி வெளிப்படுத்துவதாக பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

சென்னை to பெங்களூர்  2 மணி நேர பசுமை வழிச்சாலை பயணம்.,  இந்த தேதியில் ஓபன்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here