தமிழக அரசுப்பள்ளியில் இதற்கு இதுதான் நெறிமுறை.., கல்வித்துறை எச்சரிக்கை!!!

0
தமிழக அரசுப்பள்ளியில் இதற்கு இதுதான் நெறிமுறை.., கல்வித்துறை எச்சரிக்கை!!!
தமிழக அரசுப்பள்ளியில் இதற்கு இதுதான் நெறிமுறை.., கல்வித்துறை எச்சரிக்கை!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 9.40 லட்சம் பேரில் 91.39 சதவீதம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் ஒரு சில அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுவதில்லை என கல்வித்துறையின் 14417 என்ற உதவி எண்ணுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய அறிவிப்பை கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தளபதி 68 டைட்டில்… விஜய்யின் அல்ட்ரா லெவல் ஐடியா… என்னப்பா.., தல தோனி ஃபேன்ஸ் ரெடியா..?

அதன்படி அரசு பள்ளியில் மாணவர்கள் தங்களுக்கான விருப்பமான பாடப்பிரிவுகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்கு பாடப்பிரிவுக்கான முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் இருந்தாலே போதும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளாத பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here