தமிழக பள்ளிகளில் விடுமுறை காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.., கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடு!!

0
தமிழக பள்ளிகளில் விடுமுறை காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.., கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடு!!
தமிழக பள்ளிகளில் விடுமுறை காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.., கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடு!!

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற நிலையில் சமீபத்தில் அதற்கான ரிசல்ட்களை வெளியிட்டது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையை நீடித்து வருகிற ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள், வேகக்கட்டுப்பாடு கருவி, தீயணைப்பான்கள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவை முறையாக செயல்படுகிறதா? என்றும் வானங்களை ஒழுங்காக பராமரிக்கப்பட்டு உள்ளனவா? என்றும் ஆய்வு செய்யும் பணிகள் கடந்த வாரம் புதன் கிழமை ஆரம்பித்தது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கூட்டு குழு ஆய்வு நடந்தது.

ரூ.20,000 மேல் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இது தேவையில்லை., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 40 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. பள்ளி பேருந்துகளில் கேமரா வைக்கப்பட்டு இருக்கிறதா? என சோதனை செய்யப்பட்டது. மேலும் டிரைவரின் தகுதி சான்றிதழ் , வாகன தகுதி சான்றிதழ், உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு, இதில் முறையான பாதுகாப்பு வசதி மற்றும் தகுதி சான்றிதழ் இல்லாத 4 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here