தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு – என்னென்ன இயங்கும்?? இயங்காது?? முழுவிபரம்!!

0

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பட்டு விதிகளை அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பட்டு விதிமுறைகள்

2020 மார்ச் மாதத்தில் நாடெங்கிலும் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை பரவி வருகிறது. முதல் அலையை விட இந்த கொரோனா வைரஸ் வேகமெடுத்து வருகிறது.

‘தல’ அஜித்தின் வலிமை பட அப்டேட் – எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்!!

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே ஸ்தம்பித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் சம்மந்தப்பட்ட உபகாரணங்களுக்கு இறக்குமதி வரியை மோடி அரசு ரத்து செய்துள்ளது.  மகாராஷ்டிரா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவி வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதாவது வழிபட்டு தளங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது. மளிகை கடை போன்றவை சில கட்டுபாடுகளுடன் தான் தொடரும்.

அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளிலும் பார்சல் மட்டுமே தர வேண்டும். சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க தடை விதித்துள்ளது. ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. 50% ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும். பணிக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பது கட்டாயம். மின் வணிக சேவைகளும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சின்ன திரையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

Lock
Lock

கிளப், விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு அனுமதி கிடையாது. சர்வதேச மட்டும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிக்கு மட்டுமே அனுமதி. புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் அவசியம். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி கிடையாது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 26 அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here