Thursday, April 25, 2024

அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோவடிவில் பாடங்கள் – தமிழக பள்ளிக்கல்வித்துறை !!

Must Read

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிமாணவர்களுக்கு பாடங்கள்கற்பிக்க தமிழக அரசு தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோமுறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை  முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொலைக்காட்சி வாயிலாக பாடம்:
online education
online education

அதற்காக தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோமுறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை நேற்று தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் பள்ளிமாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணிநேரம் பாடம் நடத்தப்படும்.

நேர அட்டவணை:

இந்ததிட்டம் மூலமாக எந்தெந்த பாடம் எப்போது நடத்தப்படும் என்ற அட்டவனையையும் அரசு வெளியிட்டு இருக்கிறது .

online education
online education

காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனிபாடமும்,  7.00 – 8.00 மணிவரை இயற்பியல் பாடமும் , 8.00 – 8:30 மணிவரை 10ம் வகுப்பிற்கான தமிழ்பாடமும், 8:30 – 9.00 மணி வரை 10ம்வகுப்பு ஆங்கிலபாடமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இது போன்று ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister
chief minister

ஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம் பள்ளி மாணவர்களுக்காகவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு  1  மணிநேரமும் பட்டியலானது வகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்கள் இன்று வீடியோ வடிவில் மாணவர்களை சென்றடைகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -