
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், ஊக்கத்தொகையும் மாதம் தோறும் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊக்கத்தொகை ரூ.1000 ம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,100 ம் உணவு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவு உதவித்தொகையை உயர்த்தி தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு உணவு தொகை ரூ.1000 ல் இருந்து 1400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவு தொகை ரூ.1,100 இல் இருந்து 1500 ஆகவும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!!