தமிழக அரசு மருத்துவமனைகளில் திடீர் ரெய்டு.., அரசு பறந்த அதிரடி உத்தரவு!!!

0
சமீபத்தில் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டினில் உணவுப் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், அதில் எலி நடமாட்டம் இருப்பது போன்ற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து இதற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கேன்டீன்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேன்டின்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி கேண்டீன்கள் சுத்தமாக வைக்க வேண்டும். கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன்  கேண்டீன்கள் சரியான முறையில் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் நடக்கிறதா என்பதை அந்தந்த துறை முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here