தமிழகத்தில் முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

0

தமிழகத்தில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவுள்ள நிலையில் தற்போது முதற்கட்டமாக 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியா முழுவதும் அவசரகால பயன்பாட்டிற்காக தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் 44 வயது உள்ளவர்கள் வரை தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அனைத்து மாநிலங்களிலும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அதிகாரிகள் தடுப்பூசி வழங்குவதற்கான பணிகளில் மிக தீவிரமாக இருந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நேற்றைய (ஏப்ரல் 27) நிலவரப்படி 55.51 லட்ச தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் முதன்முதலாக தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த அரசும் தமிழகமே என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கு முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசியை மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து மக்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here