தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய தகவல் வெளியீடு – தலைமை அதிகாரிகள் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் குறித்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்துள்ளதால் தேர்தல் அதிகாரிகள் மிக கவனமாக தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். மேலும் வாக்காளர்கள் நலன் கருதி பல அறிக்கைகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் களம் மிக பரபரப்பாக காணப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி பண்ணா எங்கிருந்து கொரோனா குறையும்?? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

மேலும் தமிழகத்தில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 7,255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கடைசியாக மொத்தம் 4,512 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டது. மீதமுள்ள 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் நடைபெறும் நேரம் குறித்த தகவலை அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here