தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

0

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதனை தேர்தல் ஆணையம் கவனிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் தேர்தலை தக்க பாதுகாப்புடன் நடத்த தேர்தல் ஆணையம் மிக கவனமாக இருந்து வருகிறது. மேலும் பிரச்சார கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதனை எந்த கட்சியும் பின்பற்றுவது போல் தெரியவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவுவதற்கு பிரச்சார கூட்டமும் ஓர் காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அவர்களை காண வரும் தொண்டர்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை மறந்துவிடுகின்றனர்.

#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு 337 ரன்கள் இலக்கு!!

தற்போது இதுகுறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு ஓர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தேர்தல் பணிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது சற்று வேதனைக்குரியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here