தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு ., வானிலை மையம் தகவல்!!!

0

தமிழகத்தில் கோடை காலங்களுக்கு முன்னதாகவே சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழக பட்ஜெட் 2023-24., இத்தனை திட்டங்கள் இடம் பெறுமா? அல்லது நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுமா?

இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதாக செய்திகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (மார்ச் 19) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் திறந்தவெளியில் சென்று வரும் போது மரத்தின் அடியிலோ, உலோக கட்டிடங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என்றும் பேரிடர் முகமை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here