தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்.. இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, துபாயில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

0
தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் - இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்..., துபாயில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் - இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்..., துபாயில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சென்னை உள்ள சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் சார்பில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல உதவிகள் மட்டும் அல்லாமல் துபாய் நாட்டில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.

தமிழக வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!

இந்திய அளவில் நடைபெறும் பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாடி வந்தாலும் கிரிக்கெட்டுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்து தான் வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு மாநிலம் சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேஷன் என்ற பெயரில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தற்போது விக்னேஷ் மாஜினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது திறமை மற்றும் கிரிக்கெட் போட்டியில் உள்ள ஆர்வத்தின் காரணமாக இப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட. ஆனால் அவரது குடும்ப வறுமை காரணமாக தனது விளையாட்டை தொடர முடியாமல் பாதியிலே நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் ஆன ஜான் அமலன் செய்தியாளர்களை சந்தித்து எங்களது அமைப்பின் சார்பாக 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது தமிழக அளவில் தொடங்கியுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி துபாய் நாட்டில் நடைபெற உள்ளது. இதனால் இறுதி போட்டிக்கு தேர்வாகும் வீரர்கள் அனைவரின் விமான பயணம், தங்குமிடம், உணவு ஆகிய அனைத்து செலவுகளையும் சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேஷன் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அதனால் திறமையான வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஆசையாக உள்ளது. மேலும் துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பல பிரபலங்கள் உட்பட அரசியல் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் ஜான் அமலன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here