திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய சிறப்பு ஏற்பாடு…, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!!

0
திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய சிறப்பு ஏற்பாடு..., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!!
திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய சிறப்பு ஏற்பாடு..., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள திறமையான கிரிக்கெட் வீராங்கனைங்களை தேர்வு செய்வதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் உட்பட உள்ளூர் போட்டிகளானது, பல மாநிலங்களில் உள்ள இளம் வீரர்களை கண்டறிய முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உள்ளூர் தொடர்கள் மூலம், தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, பிசிசிஐயானது சர்வதேச இந்திய அணியிலும் வாய்ப்பு அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மகளிர் கிரிக்கெட்டையும் ஊக்குவிக்கும் விதமாக பல ஏற்பாடுகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் குறிப்பாக, ஆடவருக்கான ஐபிஎல் தொடர் போலவே, இந்தியாவில் உள்ள மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதன் முதலாக நடத்தப்பட்டது. இந்த தொடரானது, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இதன் மூலம், பல்வேறு மாநிலங்களில் உள்ள, பெண்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை கண்டறியவே, தமிழக கிரிக்கெட் சங்கம் தற்போது சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

இந்த விஷயத்தால் தான் பீட்டர் பால் உயிரிழந்தார் – உண்மையை போட்டு உடைத்த வனிதா விஜயகுமார்!!

அதாவது, தமிழகத்தில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறிய, 4 குழுக்களை தமிழக கிரிக்கெட் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுக்கள் மூலம், தமிழகத்தின் 37 மாவட்டங்களில், வரும் மே 13, 14, 17, 20 மற்றும் 21 ல் திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் போல, மகளிர் பிரீமியர் லீக் தொடரும் அடுத்த 2 ஆண்டுக்குள் நடத்தப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here