Tuesday, April 23, 2024

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் உரை!!

Must Read

கொரோனா பொது முடக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது அதில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பொது முடக்கம் நீட்டிப்படலாமா என்றும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

முதல்வர் ஆலோசனை:

இன்று தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், கொரோனா பாதிப்புகள் பற்றியும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, தென் மாவட்டங்களில் தான் அதிகமாக கொரோனா பரவல் உள்ளது. அதனால், பொது முடக்கத்தை நீட்டிப்பது பற்றியும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. பின்பு, கடைசியாக முதல்வர் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் பற்றி உரை ஒன்றை நிகழ்த்தினார்.

உரையில் கூறியதாவது:

அவர் தற்போது நிகழ்த்தி உள்ள உரையில், “தமிழகத்தில் கொரோனா தொற்று சதவீதம் குறைந்து உள்ளது. மாவட்ட ஆட்சியாளர்களின் சிறப்பான சேவையே இதற்கு கரணம், தொடர் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளால், இந்த பலன் நமக்கு கிடைத்து உள்ளது.

தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை – அரசாணை வெளியீடு!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமாகவும், நலமாகவும் வீடு திரும்ப வேண்டும். அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பரவலை தடுக்கவும், இயல்பு நிலைக்கும் திரும்பலாம்.”

தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள்:

“வரும் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கப்படும். சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தடுப்பு நடவடிக்கைகளில் 20,000 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். 1196 நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் பணியாளர்கள் நிறுவனங்களில் வேலை பார்க்கலாம் என்றும், மற்ற மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் கூறப்பட்டுஉள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

25,532 காய்ச்சல் முகாம்கள் சென்னையில் அமைக்கப்பட்டு உள்ளன. நான் ஒட்டுமொத்தமாக அனைவர்க்கும் வலியுறுத்துவது மக்கள் அனைவரும் அரசு கூறும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.” என்று தனது உரையில் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -