
தமிழகத்தில் கால நிலைகளுக்கேற்ப பல்வேறு வைரஸ் நோய் பாதிப்புகளால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை கொண்ட வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த அறிகுறிகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இருந்ததால், நேற்று (நவ.3) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிக் பாஸில் பிரதீபுக்கு ரெட் கார்டு., அதிரடியாக வெளியேற்றப்பட்ட சம்பவம்? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!
இதைத்தொடர்ந்து முதல்வருக்கு வைரஸ் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே காய்ச்சலுக்கான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுவதோடு, சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நோயால் முதல்வர் பாதிக்கப்பட்டது பலர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.