தமிழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்? போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்? போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்? போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்? போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தின நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

பேருந்துகளில் கூடுதல் கட்டணம்:

தமிழகத்தில் சாதாரண நாளில் வசூலிக்கும் பேருந்து கட்டணத்தை காட்டிலும் விடுமுறை நாட்களில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதாவது, சாதாரண நாளில் திருச்சியில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகளில் ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், விடுமுறை நாட்களில் ரூ.2500 வரைக்கும் கூட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பண்டிகை தினங்களில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனிடையே, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர். இதனிடையே, கோவை வடக்கு, மேற்கு, சூலூர், கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கிட்டத்தட்ட 509 ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து பேருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அபராதமும் விதித்தனர்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழக போக்குவரத்து துறை ஆம்னி பேருந்துகளுக்கென்று கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. இதனால், பண்டிகை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் இஷ்டம் போல பேருந்து கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றனர். பொதுமக்கள் இது குறித்து புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் அரசு சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here