வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை – வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தல்!!

0

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வங்கி ஊழியர்களின் வருகையை 50% குறைக்க உறுப்பினர் வங்கிகளுக்கு, தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் 50% ஊழியர்கள் மட்டும் அனுமதி

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 23,310 பேர் கொரோனவால் பாதிப்புக்கு அடைத்துள்ளனர். இதன் தாக்கமாக தமிழக அரசு, அரசு ஊழியர்கள் 50% மட்டும் பணிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமமும், வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதை 50% குறைக்க உறுப்பினர் வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு வரும் 19ஆம் தேதி வரை வங்கி கிளைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டும் அதிகாரிகளுடன் செயல்பட உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமமும், வங்கி ஊழியர்கள் அடுத்த அரசாணை வரும்வரை 50% ஊழியராலுடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அது மட்டும் இல்லாது இந்த காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே உள்ளதால் அடுத்த அறிவிப்பு வரும்வரை முன் அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருமாறு தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here