
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு இரண்டாண்டு தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு (B.Ed.,) கட்டாயமாகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி மறுகூட்டலிற்கு தலா ஒரு பாடத்துக்கு 205 ரூபாயும், மறுமதிப்பீட்டிற்கு ஒரு பாடத்துக்கு 505 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் உரிய கட்டண தொகையை கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் நேரடியாக சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
ரயில் விபத்து எதிரொலி: ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு., தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!!