கொரோனா தொற்றால் தள்ளி போன சர்தார் பட படப்பிடிப்பு – இரண்டு ஆண்டுக்கு பிறகு தொடங்கிய படத்திற்கு வந்த சோதனை!!!

0

நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் சர்தார். தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி:

தமிழ் சினிமாவில் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர் நடித்த முதல் படமே வெற்றி படமாக இருந்தது. மேலும் இந்த படத்தில் ஒரு கிராமத்து பையனாக தன் நடிப்பு திறமையை காட்டி உள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை தந்து உள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இரும்புத்திரை, ஹீரோ திரை படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இரு வருடத்திற்கு முன்பே ஒப்பந்தம் ஆகி இருந்தார். படத்திற்கு சர்தார் என்று பெயர் வந்து இருந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் கடந்த ஆண்டு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வந்தது. மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு தள்ளி போய் விட்டதாக தகவல் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here