அவர் வரலைனா போகட்டும் – வேற நடிகரை வைத்து படம் பண்ணிப்பேன் – வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் குமுறல்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதி என அதன் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் சூரி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.  இதனை அடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் மாஸ் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பினர்.

ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படம் காமெடி படம் என்றும் இதன் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்காது என்றும் அண்மையில் தெரிவித்தார்.  ஆனால், அதன் இயக்குனர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதி என்றும், சிவகார்த்திகேயன் மெச்சுரிட்டி ஆகிவிட்டார் அதனால் வளர்ந்து வரும் இளம் நடிகர் நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here