சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசு பணியில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு!

0

தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கும் விதமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை:

தமிழகத்தில் இதற்கு முன்பே அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டப் படிப்புகளில்  7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இதற்கு முந்தைய அதிமுக அரசு சட்டசபையில் அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட திமுக அரசு, இதனை உறுதிப்படுத்தும் விதமாக தீர்மானம் கொண்டு வந்து அதை அமல்படுத்தியது.

இது இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் உறுதிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்த அறிவிப்பை வழங்கிய அரசுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.  இதனை மேலும், அதாவது இந்த அறிவிப்புக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழக அரசு நேற்று முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

 

இந்த அறிவிப்பு மக்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தி இருப்பது குறிப்பிடத் தகுந்தது. அந்த அரசாணையில் தெரிவித்துள்ளதாவது, அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.  மேலும், இதற்கான முறையான இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பிறகு இட ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் வழியில்  படித்தவர்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here