
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இண்டேன் சமையல் கேஸ் சிலிண்டரை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவர்கள் கேஸ் சிலிண்டரை மாதந்தோறும் மொபைல் மூலமாகவே புக் செய்து பெற்றுக் கொள்கின்றனர். சிலிண்டரை பதிவு செய்வதற்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப மொழிகள் இடம் பெற்றிருக்கும். இதை மக்கள் தங்களுக்கு ஏற்ற மொழிகளை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது இதில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டு ஹிந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டும் அல்லாமல் இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில் “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழியை நிறுத்தி இந்தியை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்?? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்” என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.