நடிகர் திலகத்தின் 93வது பிறந்தநாள் – டூடுலை வெளியிட்டு தூள் கிளப்பிய கூகுள்!!

0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் திலகத்தின் பிறந்த நாள்:

தமிழ் திரையுலகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  தமிழ் திரை உலகத்தில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து மிகப்பெரிய சாம்ராஜ்யமே நடத்தியவர் நடிகர் சிவாஜி கணேசன் என்பது தான் உண்மை.  இவர் நடித்த கர்ணன், வீர பாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்கள் இவரின் பெருமைகளை இன்றும் பறைசாற்றி வருகிறது.

இவரது திறமையை பாராட்டி கலைமாமணி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  இவரது பெருமையை மேலும் அங்கீகரிக்கும் விதமாக சிறப்பான டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இது பலரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here