அண்ணாத்த படத்தை ஸ்பெஷல் நபருடன் சேர்ந்து பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் – அது யார் தெரியுமா!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தனது பேரனுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்தாக ரஜினி தெரிவித்துள்ளார்.

படம் பார்த்த ரஜினி:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த.  படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற தீபாவளி அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது.  இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என ஒரு பட்டாளமே நடித்துள்ளதால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த படம் குறித்து முக்கிய பதிவு ஒன்றை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார்.  அதாவது, இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாக தனது பேரனுடன் ஒன்றாக அமர்ந்து இந்த படத்தை பார்த்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும், இந்த படத்தின் அனுபவங்களை தனது மகள் உருவாக்கிய ஹூட் ஆப் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here