அமெரிக்கா வரை ரீச் ஆன அண்ணாத்த – தலைவர் படம்னா சும்மாவா!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆதிக்கம் செலுத்தும்  அண்ணாத்த :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்மையில் தயாரான படம் அண்ணாத்த.  கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நாளை இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது, இந்த படம் வெளிநாடுகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் உள்ள  572 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.  அது போக, மலேசியாவில் 110, சிங்கப்பூரில் 23, ஐக்கிய அரபு நாடுகளில் 83, நியூசிலாந்தில் 14, இலங்கையில் 60, இங்கிலாந்தில் 35 என உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1119 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.  தங்கள் தலைவரின் படம் வெளிநாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துவதை அவரது ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here