அஜித் படத்தை மனம் திறந்து பாராட்டிய விஜய் – நெகிழ்ந்து போன தல ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் தன்னை பாராட்டியாக இயக்குனர் சிவா அண்மையில் தெரிவித்துள்ளார்.

சிவாவை பாராட்டிய விஜய் :

நடிகர் ரஜினிகாந்தை வைத்து அண்மையில் அண்ணாத்தை படத்தை இயக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் தல அஜித்துடன், பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனை அடுத்து, அண்ணாத்த படத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற இவர், நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது இவர் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில், வெளிவந்த வேதாளம் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் தன்னை பாராட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படத்தையும் அவர் பார்ப்பதாகவும் சொன்னார். இதனை அடுத்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here