காதல் காவியம் பல படைத்த காதல் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து !!!

0

மணி ரத்தினம் அவர்கள் ஜூன் 2 ,1956 அன்று மதுரையில் பிறந்தார், அவர் இன்று அவருடைய  65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மணி ரத்தினம் அவர்கள் தமிழ்  இயக்குனர்களில் இந்திய அளவில் அறியப்படும் மிக முக்கியமானவர்களில் ஒருவர். இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். தமிழ்  திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன் முயற்சியாலும், திறமையாலும் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டு உள்ளார். சுருக்கமான வசனங்களால் ரசிகர்களை ஈர்த்தவர்.

 
மேலும் அவர் தனது படங்கள் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம்,நகர்ப்புற நடுத்தர மக்களின் வாழ்க்கை போன்றவை பிரதிபலிப்பவையாக இருக்கும்.இதற்கு சான்றாக அவரது மௌனராகம்,பம்பாய்,நாயகன்,ரோஜா,உயிரே என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் சாதனைககளை அவரின் திரைப்பட சாதனைகளை பாராட்டி இந்தியா அரசு அவருக்கு 2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.


சுருக்கமான வசனங்களுக்கு சொந்தக்காரரான  மணி ரத்தினம் அவர்கள் திரைப்பட நடிகை சுஹாஷினியை 1988இல்  திருமணம் செய்துக்கொண்டார். அவரின் படங்கள் மக்கள் மத்தியில் மற்றும் சமுதாயத்தில் இன்னும் பெரிய தாக்கம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் படைத்த காவியங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here