கடைசி காலத்தில் காசில்லாமல் இறந்த விஜய் பட நடிகை – செய்தியை கேட்டு கண் கலங்கி போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவின், பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீவித்யா தனது கடைசி காலத்தில் அனுபவித்த துயரங்கள் குறித்த சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வைரல் ஆகியுள்ளது.

நடிகை துயரம் :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய நடிகையாக விளங்கியவர் நடிகை ஸ்ரீவித்யா. தனது 13 வயதில் நடிப்பு களத்தில் இறங்கிய அவர், நடிகர் சிவாஜி கணேசனின் திருவருட்செல்வர் என்ற படத்தில் அறிமுகமாகி தனக்கான இடத்தை பதிவு செய்தார். ரஜினி, கமல், ஜெய்சங்கர், விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் விஜய்யுடன் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நோயின் தாக்கம் காரணமாக, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 53 வயதில் காலமானார்.

இந்த நிலையில், அவர் உயிர் போகும் வேளையில் உடல் முழுவதும் ரண வேதனையுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல், அவரது கடைசி காலகட்டத்தில் மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் இவர் தவிர்த்து வந்ததாக இவருக்கு நெருக்கமான ஒரு பெண் மறைமுகமாக கூறியுள்ளார். பிரபல நடிகைக்கு கடைசி காலத்தில் ஏற்பட்ட, இந்த சோகம் ரசிகர்களை கண்கலங்க செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here