விஜய் டிவியில் கிட்டத்தட்ட 6 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. ஒரு வீட்டில் 15க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களை 100 நாட்களுக்கு அடைத்து வைத்து, அவர்களுக்கு பல டாஸ்குகளை கொடுத்து, இறுதியில் வெற்றியாளரை அறிவிக்கும் இந்த போட்டிக்கு மக்கள் ஏகப்பட்ட வரவேற்புகளை கொடுத்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில், இந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் துவங்குவதாக ப்ரோமோ ஒன்று வெளியாகிள்ளது. இம்முறை, ‘பிக் பாஸ்’ சீசன் 7 இரண்டு வீடுகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி மீது பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.