நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் அத பண்ணிட்டேன் – யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!!

0
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் அத பண்ணிட்டேன் - யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!!
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் அத பண்ணிட்டேன் - யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!!

காமெடியில் முன்னணி நடிகராக உள்ள யோகி பாபு அண்மையில் நடிகர் ஷாரூக்கானிடம் ஒரு கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதை தான் முன்பே செய்து விட்டதாக கூறி நடிகர் யோகி பாபுவுக்கு ஷாக் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

யோகி பாபுவை பாராட்டிய ஷாருக்:

தமிழில் யோகி என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் யோகி பாபு. இதனை அடுத்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து தனது இடத்தை தக்க வைத்து கொண்டார். கோலமாவு கோகிலா, பிகில், மெர்சல் உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அண்மையில் இவர் நடிப்பில் உருவான டாக்டர் படமும் இவருக்கு இமாலய வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில், இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் என்ற இந்தி படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் அத பண்ணிட்டேன் - யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!!
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் அத பண்ணிட்டேன் – யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!!

இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட இவர் தனது மண்டேலா படத்தை ஒரு முறை பார்க்குமாறு ஷாருக்கானிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த படத்தை நான் நீங்கள் சொல்லும் முன்பாகவே ஓடிடி தளத்தில் பார்த்து விட்டதாக கூறி யோகி பாபுவுக்கு ஷாக் கொடுத்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரிடம் கிடைத்த இந்த கௌரவதால் பெருமிதத்தில் உள்ளார் யோகி பாபு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here