நடிகர் புனித் ராஜ்குமாரின் இந்த பணியை நான் முன்னெடுக்கிறேன் – விஷாலுக்கு குவியும் பாராட்டு!!

0

கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் விட்டு சென்ற முக்கிய பணியை இனி வரும் காலங்களில்  தாம் முன்னெடுத்து செல்ல உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

பணியை தொடரும் விஷால்:

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்து முடிந்தது.  அவரது இறுதி சடங்கில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதாக காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் ஏற்கனவே,  ஏழை எளியோருக்காக பல உதவிகள் செய்து வந்தார்.  அது போக, 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக, 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் அவர் ஏற்று வந்தார்.  அவரது மறைவை அடுத்து அந்த மாணவர்களின் கல்வி பொறுப்பை தாம் ஏற்க போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.  அவரது இந்த செயலுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here