நடிகர் விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ் – அப்டேட் கேட்டு வாயடைத்து போன தளபதி ரசிகர்கள்!!

0

நடிகர் விஜய்யின் 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக வெளியாகிய தகவல் கேட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

உற்சாகத்தில் ரசிகர்கள்:

தமிழ் சினிமாவில் செல்லமாக தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தற்போது, இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  75% படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்தது.  இந்த படத்தை அடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66ல் நடிப்பார் என அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

ஆனால், இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்குவதற்குள் தளபதி 67 படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.  இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.  விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என நம்பப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here