விஜய்யின் பீஸ்ட் படம் இதை மையமாக வைத்து தான் உருவாகிறது – இயக்குனர் நெல்சன் ஓபன் டாக்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முக்கிய கதையம்சம் பற்றிய அப்டேட் ஒன்றை அதன் இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சொன்ன அப்டேட்:

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.  பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில்  வில்லனாக செல்வராகவன் நடிக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் கதை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படம், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களைப் போலல்லாமல், இதன் கதையம்சம் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பைக்  கேட்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  இந்தப் படம் எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here