படையை கிளப்ப தயாராகுங்கள் – மன்ற ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு கோரிக்கை!

0

தனது ரசிகர் மன்றத்தை விரிவு படுத்தி மக்கள் பணியாற்ற தயாராகுமாறு மன்ற நிர்வாகிகளை நடிகர் சிம்பு வலியுறுத்தி உள்ளார்.

மன்றத்தை விரிவுபடுத்துங்கள்:

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர் டி.இராஜேந்திரனின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவர் நடிப்பில் அண்மையில் உருவான மாநாடு படம் ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை இவர் வழங்கியுள்ளார்.

அதாவது, தனது ரசிகர் மன்றத்தில் மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவ அணி, கலை இலக்கிய அணி, தகவல் தொழில் நுட்ப அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை ஆரம்பித்து மன்றத்தை விரிவுபடுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் மூலம் மக்கள் பணியாற்ற இவர் தயாராகி விட்டதாக திரை உலகத்தில் பேச்சு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here