ஒரே நாளில் தனது இரண்டு படங்களையும் களத்தில் இறக்கும் சசிகுமார் – பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

நடிகர் சசிகுமாரின் இரண்டு படங்கள் ஒரே நாளில், அதாவது வருகிற நவம்பர் 26ம் தேதி அன்று திரையரங்கத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ரிலீஸ்:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார்.  இவரின் சுந்தர பாண்டியன், குட்டிப்புலி போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த உடன்பிறப்பே படம் பயங்கரமாக பிரபலமாகியது.  இதனை அடுத்து, தற்போது கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களில் பல படங்கள் ஷூட்டிங்கை முடித்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில், தற்போது எம்.ஜி.ஆர்.மகன் என்ற படம் வருகிற நவம்பர் 26ம் தேதி அன்று தியேட்டரில் ரீலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.  இதே போல், தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கொம்புவச்ச சிங்கம்டா படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்தது.  இவரின் அடுத்தடுத்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here