சந்தானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மாஸ்டர் இயக்குனர் – படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக பேட்டி!

0

நடிகர் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு, இந்த படம் பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போஸ்டரை வெளியிட்ட மாஸ்டர் இயக்குனர்:

தமிழ் திரை உலகத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகன் வரை உயர்ந்துள்ளவர் நடிகர் சந்தானம். கதாநாயகனாக பல படங்களில் நடித்து புகழ் அடைந்து உள்ளார்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தின் வசனங்களும் “பேர் வச்சாலும் வைக்காம போனாலும்” என்ற  பாடலும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான  ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா என்ற தெலுங்கு படத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் வெளியிட்டு, இந்த படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here