ரஜினிக்கு முக்கிய அறுவை சிகிச்சை – இந்த ஆபரேஷன் செய்யலைன்னா ரிஸ்க் தானாம்!!

0

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு அறுவை சிகிச்சை:

தமிழ் திரை உலகத்தினரால்  சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.  கடந்த சில தினங்களுக்கு முன் தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்கு தனது குடும்பத்துடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.  விருது பெற்ற பின், பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினி இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இதனை அடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

ஆனால், இவருக்கு ரத்த நாள திசுவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இது மட்டுமல்லாமல், இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here