உலக நாயகன் கமலின் விக்ரம் பட அப்டேட் – ஒரே பிரேமில் ஒன்றாக மோதும் 3 ஜாம்பவான்கள்!!

0

நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் காட்சிகள் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ் அப்டேட்:

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம்.  படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இணைந்துள்ளதாக வந்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகினர்.

தற்போது, இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற 17-ந் தேதி முதல் கோவையில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட மூவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here