தனது பிறந்தநாளை முக்கிய நபர்களோடு கொண்டாடிய கமல்ஹாசன் – யாருன்னு பார்த்தா அசந்து போயிருவீங்க!!

0

நடிகர் கமல் நவம்பர் 7ம் தேதி வரவுள்ள தனது பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன்.  உலக நாயகன் என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் பல முக்கிய படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்.  அந்த வகையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் திரையரங்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிற நவம்பர் 7ம் தேதி வரவுள்ளது.  ஆனால், அதற்கு முன்னதாகவே கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் பட குழுவினருடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here