என்ன சார் அடி பலமோ?அதிதியை Propose செய்துவிட்டு திடீரென ஜகா வாங்கிய தமிழ் பிரபலம்!!

0

அதிதி சங்கரை காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்த  காமெடி நடிகர் கூல் சுரேஷ், திடீரென தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் எனக்கு தங்கச்சி மாதிரி என கூறியுள்ளார்.

பின்வாங்கிய நடிகர்:

இயக்குனர் சங்கரின் மூத்த மகள் அதிதி நடிப்பில் வெளியான விருமன் படத்தைப் பார்த்துவிட்டு வந்த, பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் அதிதியை தான் காதலிப்பதாகவும், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்  என்றும் தெரிவித்தார். நீங்க உங்க படத்தை மட்டும் அல்ல, மகளையும் பிரம்மாண்டமாகத்தான் வளர்த்து இருக்கீங்க  என பேசினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரை  தான் காதலிப்பதாகவும், எங்க காதலை சங்கர் சேர்த்து வைக்கவில்லை என்றால் முதல்வர் வீட்டின் முன் போராட்டம் செய்வேன் என்றும் அறிவித்தார். இந்த செய்தி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து  , நடிகர் கூல் சுரேஷ் தன் முடிவில் இருந்து திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.

அதாவது தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்றும், எனது கருத்துக்களை திரும்ப வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று பேசினார். தொடர்ந்து அதிதி தனக்கு தங்கை மாதிரி என்றும் வாக்குமூலம் அளித்தார். இதை பார்த்த, நெட்டிசன்கள்  என்ன தம்பி அடி பலமோ? ஏன் இந்த திடீர் மாற்றம் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here