முதன் முதலாக இயக்குனர் அவதாரத்தை கையில் எடுக்கும் 90ஸ்களின் கனவு நாயகன் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0

தமிழ் திரை உலகத்தில் 90ஸ் களின் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த்சாமி தற்போது ரீமேக் படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளார்.

இயக்குனராகும் கனவு நாயகன்:

தமிழில் 90ஸ் காலத்தில் மிகப்பெரிய நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. பல படங்களில் நடித்த இவர், சமீப காலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக களமிறங்கினார்.  இந்த வாய்ப்புகளும் இவருக்கு அந்த அளவிற்கு கை கொடுக்க வில்லை.  இதனை அடுத்து, ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனி ஒருவன் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் வெளியான கானே கானே என்ற படத்தை அவர் தமிழில் இயக்கி தாமே நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  பல நாட்களுக்கு பிறகு களமிறங்கும் இவரின் இயக்குனர் முகம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here