தீபாவளி பண்டிகை: தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில்., இன்று முன்பதிவு தொடக்கம்!!!

0
தீபாவளி பண்டிகை: தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில்., இன்று முன்பதிவு தொடக்கம்!!!
தீபாவளி பண்டிகை: தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில்., இன்று முன்பதிவு தொடக்கம்!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வார விடுமுறை, பண்டிகை உள்ளிட்ட நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தாம்பரம் to நாகர்கோவில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி இம்மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையான நவ.5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் இருந்து மாலை 04.35 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக நவ.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (நவ.2) காலை 8 மணி முதல் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here