பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி – சென்னையில் நடந்த பயங்கரம்!!

0
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி - சென்னையில் நடந்த பயங்கரம்!!
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி - சென்னையில் நடந்த பயங்கரம்!!

சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவியை ராமன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கொலை:

சென்னையில் இன்று மதியம் கல்லூரியை முடித்து விட்டு ரயிலுக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஸ்வேதா என்ற மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமன் என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவை சரமாரியாக குத்தினார். இதனை அடுத்து, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி - சென்னையில் நடந்த பயங்கரம்!!
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி – சென்னையில் நடந்த பயங்கரம்!!

இதில் சிகிச்சை பலன் தராமல் மாணவி உயிரிழந்தார். அவரை கொலை செய்த ராமன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ல் சுவாதி என்ற மாணவி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here