ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர் இனி இவர் தான் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தாலிபான்கள்!!

0

ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த், தாலிபான்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய அரசின் அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது.

தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டின் ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிய பிறகு அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அந்நாட்டு மக்களே அவர்களின் ஆட்சிக்கு பயந்து வேறு நாட்டுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

 

சமீபத்தில் நிறை மாத கர்ப்பிணியான காவல் அதிகாரியை தாலிபான்கள் கொன்றதாக தகவல்கள் வெளிவந்தன. இது உலக அளவில் அவர்களுக்கு எதிரான கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. மேலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிக்க பல கட்டுப்பாடுகளை தாலிபான்கள் அறிவித்து வருகின்றனர்.

முக்கியமாக பெண் சுதந்திரம் ஆப்கானிஸ்தானில் கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில் தாலிபான்களால் முல்லா ஹசன் அகுந்த் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளர். இதனோடு அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதியான அப்துல் கானி உள்துறை அமைச்சராக அங்கு பொறுப்பேற்றுள்ளார். மேலும் புதிய அரசின் அமைச்சரவை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here