பேஸ்புக் நிறுவனத்தின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை: தாலிபன்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கம்!!

0

தாலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. நேற்று தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் இன்று வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழு ஆப்கானிஸ்தானையும் கொண்டு வந்துள்ளனர்.பெண்களின் சுதந்திரம் அங்கு ஒட்டு மொத்தமாக கேள்வி குறியாகி உள்ள நிலையில் மக்கள் அங்கியிருந்து வெளியேறவே விரும்புகின்றனர்.

நேற்று பேஸ்புக் தாலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிடப்படும் அனைத்து உள்ளடங்கங்களையும் நீக்கியது. இதற்காக ஆப்கன் மொழிகள் மற்றும் அரசியல் விவகாரத்தில் நிபணத்துவம் பெற்ற நியமித்ததாகவும் பேஸ்புக் தெரிவித்தது.

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்...

இந்நிலையில் தாலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளையும் ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. பேஸ்புக்கின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here