தாலிபான்களிடம் இருந்து தப்பித்த ஆப்கான் பெண் ரிப்போர்ட்டர்!!!

0

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தலிபான்களின் கொடூரமான ஆட்சி பெண்களுக்கு எதிரானதாக அமைத்து வருகிறது. பெண்கள் அனைவரும் குழந்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், முக்கியமாக படிக்க கூடாது என்றும், வேலைக்கு செல்ல கூடாது என்று சொல்லி வருகிறது. இது மட்டுமல்லாமல் பல கட்டுப்பாடுகள் இது போலவே தற்போது வரை இருந்து வருகிறது. பல விஷயங்கள் இன்று வரை கொடூரமானதாகவே இருக்கும். இதனால் அங்கு இருந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களின் மக்கள் இந்த ஆட்சியில் வாழ பயந்துகொண்டு வேறு நாடுகளுக்கு கிடைத்த விமானங்களில் தப்பித்து கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக பல உயிர் சேதங்கள் மற்றும் கடத்தல்கள் ஏற்பட்டது. மக்கள் நாட்டை விட்டு வெளியேறவதை பார்த்த தலிபான்கள், மக்கள் எங்கேயும் செல்ல வேண்டாம் என்றும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நல்ல முறையில் ஆட்சி நடைபெறும் என்பதனை உறுதி செய்தனர்.

ஆப்கானிஸ்தான் மக்கள் காபூல் ஏர்போர்ட்டில் அனுபவிக்கும் கொடுமைகள் வீடியோ !!!

இப்படியாக இருந்தும், தற்போது மிகவும் கொடூரமான விஷயம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஹொல்லி மீகீ என்ற செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் செய்தியாளர் தலிபான்கள் பிடியில் இருந்து சிக்கியுள்ளார். இவர் தற்போது தான் தலிபான்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்ததாக கூறியுள்ளார். தான் தப்பித்து வந்த கதையினை கட்டுரையாக எழுதிய இவர் அதில், ‘தலிபான்கள் ஒரு போதுமே மாற மாட்டார்கள் என்றும் காபூலை வீழ்த்தியதற்கு பிறகு 15 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை கடத்தி அவர்களை திருமணம் செய்ய இருப்பதாகவும் ஒரு அதிர்ச்சிக்கர தகவலை தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று பெண்களை கடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் என்னவெல்லாம் தொடர போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here