தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) மூலம் மாநிலம் முழுவதும் மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்சார கம்பங்கள் மூலமும், பூமிக்கு அடியிலும் மின் வயர்கள் செல்கின்றன. மின் கம்பங்களில் சிறு தவறு ஏற்பட்டால் உயிர் சேதம் வரை செல்கிறது. அதன்படி கடந்த 2022-23 ஆம் நிதியாண்டை எடுத்து பார்த்தால் 89 பேர் பலியாகி இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் சர்வதேச எனர்ஜி ஏஜென்சியின் வழிகாட்டுதல்களின் படி மின் கம்பங்கள், மின் ஒயர்களை அமைத்தால் விபத்துக்களை தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர் தெரிவித்த நிலையில், தற்போது இதனை செயல்படுத்த கடந்த மாதம் அனைத்து மின் விநியோக மண்டலங்களின் தலைமை பொறியாளர்களுக்கு Tangedco சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.