Monday, April 22, 2024

டெய்லரின் – “Folklore”

Must Read

பிரபல ஆங்கில பாடகி டெய்லர் ஸ்விட் இன் அடுத்த பாடல் தொகுப்பை “Folklore” ( நாட்டுப்புறவியல்) என்ற தலைப்பில் வீட்டில் இருந்தே உருவாக்கி கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ளார். இதில் 16 பாடல் தொகுப்புகளும் ஒரு கூடுதல் பாடல் என 17 பாடல்கள் உள்ளது.

ஆரோன் டெஸ்நேர் உடன் இனைந்து பாடல் தொகுப்பு

புகழ்பெற்ற பாடகியான டெய்லர் ஸ்விட், பிரபல ராக் பாடல் குழு நேஷனல் இல் இருக்கும் நபரான ஆரோன் டெஸ்நேர் உடன் சேர்ந்து 17 பாடல்கள் கொண்ட “Folklore” என்ற பாடல்தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

கண்டிப்பா பாருங்க⇛⇛ சளி இருமலை விரட்டும் மஞ்சள் இஞ்சி டீ

இந்த பாடல் தொகுப்பில் டெஸ்நேர் மட்டும் அல்லாது பான் ஐவர், ஜாக் அன்டோனோ, வில்லியம் பௌவெரி உடனும் ஒரு சில பாடல்கள் தயாரித்து உள்ளார். இவை அனைத்து பாடல்களும் தொலைவில் இருந்தும் தனித்தனியாகவும் பதிவு செய்யப்பட்டு பாடலாக இணைக்கப்பட்டுள்ளது.

லாரா சிஸ்க் மற்றும் ஜான் லோ ஒளி பொறியாளர்களாக உதவி உள்ளனர். மேலும் தொகுப்பு சேர்க்கைக்கு செர்பன் ஜிஹெனே- ம் , படப்பிடிப்புக்கு பெத் கர்ரபாண்ட் -ம் பணிபுரிந்து உள்ளனர்.

கொரோனா நோய் தொற்று

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமை படுத்துதல் இருந்து வருகிறது. இதனால் டெய்லர் ஸ்விட் 2019 இல் வெளியிட திட்டமிட்டிருந்த “Several shows in support” மற்றும் “ Lover” என்ற பாடல் தொகுப்புகள் கைவிடப்பட்டன.

இருப்பினும் தனது ஓய்வு நேரங்களில் பாடல்கள் எழுதி நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் பாடல் தொகுப்பு வெளியிட்டுள்ளார். இவை அனைத்தும் அவரவர் வீடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளன. சில வீடியோ காட்சிகள் தகுந்த பாதுகாப்புடன் அதாவது சமூக இடைவேளை, முக கவசம் உதவியுடன் படம்பிடிக்கப் பட்டதாக டெய்லர் கூறியுள்ளார். மேலும் தனது முகம் மற்றும் சிகை அலங்காரம் தாமாகவே செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

பாடல் தொகுப்பு பட்டியல்:

1. “The 1”
2. “Cardigan”
3. “The Last Great American Dynasty”
4. “Exile” (feat. Bon Iver)
5. “My Tears Ricochet”
6. “Mirrorball”
7. “Seven”
8. “August”
9. “This Is Me Trying”
10. “Illicit Affairs”
11. “Invisible String”
12. “Mad Woman”
13. “Epiphany”
14. “Betty”
15. “Peace”
16. “Hoax”

கூடுதல் பாடல்:

“The Lakes”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -